“ We do not know what the future will hold for our kids”
A few of my friends make funny noises when Mumma squeezes them, they basically squeak
Stories /Back
நீயோடி கண்ணம்மா !!!

நிலவின் துண்டாக
பூமிக்கு வந்தவளே,
உன் முதல் அழுகை,
ஏனென்று நானறியேன் – நின்னை
கண்டதும், என் கண்ணில்
நீரும் நானறியேன் !!!
ஆசை முகம் நான் காண,
ஆயிரம் விழிகள் கொண்டேனடி
உன்னை தொட்டு தழுவிட – என்னை
மறந்த கதையும் நானறியேனடி !!!
தெய்வங்கள் நடைப்போடும், உன்
நடையில் – பெற்றவள்
சாயலும் கண்டேனடி – உன்
புன்னைகையில்…
வான் ஒளிதான்,
உந்தன் பார்வையோடி
பால்நிலவு தான்,
உந்தன் கன்னமோடி
வீசும் தென்றலில் வரும் – சுகம் தான்
உந்தன் மழலையோடி
அன்பின் தாரகையும்
நீயோடி கண்ணம்மா !!!