“ We do not know what the future will hold for our kids”
A few of my friends make funny noises when Mumma squeezes them, they basically squeak
Stories /Back
கண்ணுரங்கு கண்ணம்மா !!!

காணாத உலகத்தை; நீ காண
கண்ணுரங்கு மகளே..
அந்த நிலவும் – உன்
மடி மீது தவழ,
கண்ணுரங்கு மகளே…
தாயின் மனம் நீ மறவாதே,
தந்தை முகம் நீ மறவாதே,
உன்னை முத்தமிட்ட – ஒரு
கணமும் நீ மறவாதே,
கனவிலும் அணைப்பவள் – அந்த
கள்வெறியில்,
உன்னை மறந்திட்டு,
கண்ணுரங்கு மகளே !!!
விடியும் வரை – எழாதே,
விடிந்த பின்னால் – தூங்காதே,
அதுவரை
கண்ணுரங்கு மகளே !!!
தாயின் வாசமும் – அவள்
சூடும் உன்னை தழுவிட,
கருவறையில் தூங்கியது போல்,
கண்ணுரங்கு மகளே !!!
கம்பனும், பாரதியின் தமிழும்
ஏங்குமடி உன்னை பற்றி சொல்ல – அந்த
அழகை நீ ரசிக்க – சொர்க்கத்தில்
கண்ணுரங்கு மகளே !!!